நல்லது செய்வதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறதா? அறத்தை இன்றே செய்யுங்கள், அதுவே இறுதிவரை துணை என்று வள்ளுவர் சொல்கிறார்.
Tempted to put off doing good for later? Valluvar says do it today: goodness done with a clean heart becomes a friend that stays with you to the end.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 36 · அறன் வலியுறுத்தல் · Assertion of the Strength of Virtue
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
கலைஞர் உரை
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend
குறள் 34 · அறன் வலியுறுத்தல் · Assertion of the Strength of Virtue
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
கலைஞர் உரை
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show
குறள் 38 · அறன் வலியுறுத்தல் · Assertion of the Strength of Virtue
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
கலைஞர் உரை
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births
குறள் 39 · அறன் வலியுறுத்தல் · Assertion of the Strength of Virtue
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
கலைஞர் உரை
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise
குறள் 33 · அறன் வலியுறுத்தல் · Assertion of the Strength of Virtue
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
கலைஞர் உரை
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்
As much as possible, in every way, incessantly practise virtue