Thirukkural for good conduct and character

நல்லொழுக்கம்

நல்ல பழக்கங்களைக் காப்பது கடினமாக இருக்கிறதா? ஒழுக்கம் உயிரினும் மேலானது, அதுவே எல்லா நன்மைக்கும் விதை என்று வள்ளுவர் கூறுகிறார்.
Finding it hard to keep to good ways? Valluvar holds good conduct dearer than life itself, the seed from which every good thing grows.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 131 · ஒழுக்கம் உடைமை · The Possession of Decorum
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
கலைஞர் உரை
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life
குறள் 138 · ஒழுக்கம் உடைமை · The Possession of Decorum
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
கலைஞர் உரை
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow
குறள் 137 · ஒழுக்கம் உடைமை · The Possession of Decorum
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
கலைஞர் உரை
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace
குறள் 139 · ஒழுக்கம் உடைமை · The Possession of Decorum
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.
கலைஞர் உரை
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully
குறள் 140 · ஒழுக்கம் உடைமை · The Possession of Decorum
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
கலைஞர் உரை
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்
Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant