Thirukkural for leaving a good name

நற்பெயரும் புகழும்

நாம் போன பிறகு உலகம் நம்மை எப்படி நினைவுகூரும்? கொடுத்து வாழ்வதே அழியாத புகழ் தரும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
How will you be remembered? Valluvar says a name earned by giving and living well is the one thing that outlasts us.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 231 · புகழ் · Renown
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
கலைஞர் உரை
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை
Give to the poor and live with praise There is no greater profit to man than that
குறள் 236 · புகழ் · Renown
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
கலைஞர் உரை
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது
If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be born
குறள் 240 · புகழ் · Renown
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.
கலைஞர் உரை
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்
Those live who live without disgrace Those who live without fame live not
குறள் 233 · புகழ் · Renown
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.
கலைஞர் உரை
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை
There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness
குறள் 232 · புகழ் · Renown
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
கலைஞர் உரை
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor